பலதும் பத்தும்

பிரித்தானியாவில் விறகடுப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் விறகு அடுப்புக்கள் மற்றும் திறந்த அடுப்புக்களின் காரணமாக ஆண்டிற்கு 2500 பேர் உயிரிழப்பதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவற்றை தடை செய்வதன் மூலம் ஆண்டுக்கு 54 மில்லியன் பவுண்ட்ஸை சேமிக்க முடியும் என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானிய பொருளாதாரத்திற்கு £164 மில்லியனுக்கும் அதிகமான உற்பத்திச் செலவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நிலக்கரிகளை எரிப்பது காற்று மாசுப்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் நுண்துகள்கள் நுரையீரலிலும் இரத்த ஓட்டத்திலும் ஆழமாக ஊடுருவும்போது’ இதயம் மற்றும் நுரையீரல் நோய் ஏற்படலாம் என்று வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

வீட்டில் எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடானது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3,700 க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் மற்றும் கிட்டத்தட்ட 1,500 ஆஸ்துமா நோயாளிகள் உருவாக வழிவகுப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் விறகுகளை எரிப்பவர்களில் 92 சதவீதத்தினர் ஏற்கனவே தங்கள் வீட்டை வெப்பப்படுத்த வேறு வழியைக் கொண்டுள்ளனர். இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளில் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button