பலதும் பத்தும்

தவறான தடுப்பூசியால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

அங்கு தடுப்பூசி போட்ட பின்னர் குழந்தையின் கை வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியது. இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கைக்கு கட்டுப்போட்டு வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால், கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் நர்சிங் ஹோம் மீது முறைப்பாடு அளித்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) பொலிஸ் கடிதம் அனுப்பியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button