இலங்கை

மின்கட்டணத்தை 6 சதவீதமளவில் அதிகரித்து 5ஆம் தவணை தொகையை பெற ஐ.எம்.எப்.பை மகிழ்விக்க முயற்சி

மின்கட்டணத்தை 6 சதவீதமளவில் அதிகரித்து சர்வதேச நாணய நிதியத்தை மகிழ்வித்து,ஐந்தாம் தவணை தொகையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மின்பாவனையாளர் சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை மின்சார சபை மின்கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.இதற்கமைய மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மாகாண அடிப்படையில் பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை கேட்கிறது.இதற்கமைய இறுதி கருத்து கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

மின்கட்டணம் குறைக்கப்படும் என்ற தீர்மானத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்காது, மாறாக மின்கட்டணத்தை அதிகரிக்க அனுமதி என்ற அறிவிப்பையே வெளியிடப்படும்

இறுதியாக இடம்பெற்ற மின்கட்டண திருத்தத்தின் போது மின்சார சபை 8 பில்லியன் ரூபா வரை இலாபடைந்திருந்தது என்று கூறினோம் .இருப்பினும் மின்கட்டண குறைப்புக்கு சாதகமான காரணிகள் மற்றும் தரவுகள் பற்றிய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கவனத்திற் கொள்ளவில்லை.மாறாக மின்கட்டணத்தை அதிகரிப்பதற்குரிய சாதக காரணிகளை மாத்திரமே ஆணைக்குழு ஆராய்ந்தது.

எனவே இப்போதும் மின்கட்டணத்தை 6 சதவீதமளவில் அதிகரித்து சர்வதேச நாணய நிதியத்தை மகிழ்வித்து,ஐந்தாம் தவணை தொகையை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைவாகவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்படுகிறது. மின்கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்பது ஒரு ஏமாற்று நாடகம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *