இந்தியா

விஜயின் அரசியல் கூட்டத்தில் இறந்தவர்களுக்கு மோடி இரங்கல்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார்.

விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தமது ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

“தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில், நாளை காலை கரூருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் செல்ல உள்ளார்.

இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலமை கவலைக்கடமாக இருப்பதாக சொல்லப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *