பலதும் பத்தும்

தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாக தீபம் திலீபன் தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்திருந்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து அறப் போராட்டத்தை திலீபன் முன்னெடுத்தார்.

எனினும், அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர்நீத்தார்.

யாழ்ப்பாணம், ஊரெழுவைச் சேர்ந்த திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்தீபன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button