சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்!

சுமார் 121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் நேற்று (ஆகஸ்ட் 12) தென்பட்ட நிலையில், இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண மில்லியன் கணக்கான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திரண்டனர்.
வானில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்த அந்த சில நிமிடங்கள், பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தன. இந்த நிலையில், ஸ்பெயின் ஒலிம்பிக் ஸ்கேட்போர்டிங் வீரர் டேனி லியோன், சூரிய கிரகணத்தை தனது விளையாட்டுத் திறமையுடன் இணைத்து, இந்த அரிய நிகழ்வை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளார்.

ஒலிம்பிக் ஸ்கேட்போர்டிங் வீரரின் செயல்
சூரியனுக்கு முன்னால் சந்திரன் நகர்ந்து, பகல் நேரத்திலேயே வானம் இருளில் மூழ்கிய அந்த முக்கியமான தருணத்தைத் துல்லியமாகப் பயன்படுத்திய லியோன், ஸ்கேட்போர்டில் பிரமிக்க வைக்கும் வகையில் வானில் தாவினார்.
அந்தத் தாவுதலின் பின்னணியில் முழு சூரிய கிரகணம் இடம்பெற்றதால், அவர் இருண்ட வானத்திற்கு எதிராக ஒரு நிழல் உருவமாகத் தோன்றிய காட்சி பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஒரே ஒரு வாய்ப்பில் சரியான தருணத்தைப் பிடிக்க வேண்டிய இந்த சாகசக் காட்சி, பின்னர் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. தனது இந்தச் சாதனையைப் பகிர்ந்த டேனி லியோன், இதனை தனது “வாழ்வின் மிகச் சிறந்த நகர்வு” என வர்ணித்துள்ளார். குறித்த காணொளி தற்பொது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
![]()