இலங்கை

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவுள்ள புதிய பிரேரணை; ஜெனீவாவில் இன்று அனுசரணை நாடுகளிடையே முக்கிய விவாதம்

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நிறைவேற்றப்படவுள்ள புதிய பிரேரணை தொடர்பில் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் முறைசாரா விவாதம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“இலங்கையில் மீள் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான இந்த இந்த நகல் பிரேரணை சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கலந்தாய்வுகளின் பின்னர் இறுதி செய்யப்படும் எனத் தெரிகின்றது.

இந்த தீர்மானத்துக்கு, இலங்கை தொடர்பான முக்கியகுழு உறுப்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம்(பிரிட்டன்), கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவை வழங்கவுள்ளன.

புதிய பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் பிரிட்டன் முன் வைத்து அது நிறைவேற்றப்படவுள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு, இலங்கை தொடர்பான முக்கியகுழு உறுப்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவை வழங்கவுள்ளன.

,பிரதான அனுசரணை நாடுகள் சார்பாக முன்வக்கப்படவுள்ள புதிய பிரேரணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை எதிர்வரும் அக்டோபர் 1ஆம் திகதிக்கு முன்னதாக செயலகத்திடம் சமர்ப்பிக்குமாறும் இலங்கை கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிறைவேற்றப்பட உள்ள மேற்படி வரைவுத் தீர்மானம் குறித்த முறைசாரா விவாதம் இன்று 15 ஆம் திகதி திங்கட்கிழமை பிரதான அனுசரணை நாடுகளிடையே நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *