பலதும் பத்தும்

தேசிய யூடோ போட்டியில் துணுக்காய்க்கு பெருமை சேர்த்த மாணவன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தேறாங்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலை, 2025ஆம் ஆண்டு தேசிய யூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான தேசிய யூடோ போட்டி, கொழும்பில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

இந்தப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட தேறாங்கண்டல் அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவர் யதுர்ஷன், 66 கிலோவுக்கு மேல் நிறைப்பிரிவில் பங்கேற்று தேசிய வெண்கலப் பதக்கத்தை வென்று, பாடசாலை, கல்வி வலயம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

இந்த வெற்றிக்கு, பாடசாலையின் பயிற்றுநர் ர. லக்சன் மாணவருக்கு மேலதிக பயிற்சிகளை வழங்கியதுடன், பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகம் ஆதரவு மற்றும் ஊக்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button