இலங்கை

மகிந்தவைத் தொடர்ந்து சந்திரிகா, மைத்திரி வீடுகளிலிருந்து வெளியேறினர்

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தாங்கள் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

பாராளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் நேற்று முன் தினமே சான்றுரைப் படுத்தியிருந்தார்.

இதன்படி குறித்த சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன நேற்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கொழும்பு 7, நிதாஹஸ் மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக அவரது ஊடகப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *