உலகம்

அமெரிக்கா- இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது! இந்திய வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான உறவை கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்தல் தொடர்பாக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் வாஷிங்டனில் பேசிய ட்ரம்ப், தான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன் எனவும் அவர் ஒரு சிறந்த பிரதமர் எனவும், இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு சிறப்பான உறவைக் கொண்டுள்ளன எனவும் எனவே கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு எக்ஸ் தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்திருந்தார்.

அதில், இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் தொலைநோக்கு பார்வையுடைய நல்லுறவை கொண்டுள்ளன என தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *