முச்சந்தி
ஷாங்காய் உச்சி மாநாடு: ரஷ்ய – இந்திய – சீன முத்தரப்பு கூட்டணி!… அமெரிக்காவிற்கு பெருஞ் சவாலா ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

25வது உச்சி மாநாடு சீன ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் ரஷ்ய -இந்திய – சீன முத்தரப்பு கூட்டணி உருவானது, அமெரிக்காவிற்கு பெருஞ் சவாலாக எழுந்துள்ளது)
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலகின் மிகப்பெரிய பிராந்திய அமைப்பாகும். இதில் தற்போது 26 நாடுகள் அடங்கும். அதன் மொத்த பொருளாதார உற்பத்தி 30 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்குகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரச தலைவர்கள் குழுவின்
25வது உச்சி மாநாடு சீன ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.
சீனாவின் தியான்ஜின் நகரில் 2025, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்ற ஷாங்காய் (Shanghai) ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சி மாநாடு நடைபெற்றது.
இது சீனாவின் தியான்ஜினில் உள்ள மெய்ஜியாங் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.சீனாவின் பொருளாதார வளர்ச்சி நோக்கம்:
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது உரையில், கடந்த 24 ஆண்டுகளில் இந்த அமைப்பு பல வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று கூறினார். மாறிவரும் உலகத்தை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து உறுப்பு நாடுகளும் அமைப்பின் இலக்குகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேம்பாட்டு வங்கியை விரைவில் நிறுவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பரஸ்பர நன்மைகள் மற்றும் பொதுவான சாதனைகள் பொதுவான அடிப்படையில், திறந்த தன்மை மற்றும் பங்கேற்பு, நியாயம் மற்றும் நீதி, நடைமுறைவாதம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
இந்தியா மோடியின் தொலை நோக்கு திட்டம்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கான திட்டமிடல், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதிசார் ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக் குறித்து இக்கூட்டத்தில் இந்திய பிரதமரால் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டமைப்பின் கீழ், ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த இந்தியாவின் அணுகுமுறையை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இது தொடர்பாக பாதுகாப்பு, தொடர்புகள், வாய்ப்புகள் ஆகிய மூன்று அம்சங்களின் கீழ், சிறந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சி மற்றும் வளமைக்கான முக்கிய அம்சங்களாக அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், தீவிரவாதத்திற்கு எதிராக உறுப்பு நாடுகள் உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைககளை மேற்கொள்ள வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் சுட்டிக்காட்டினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, தீவிரவாதத்திற்கு எதிரான தங்களது வலிமையான ஆதரவை வெளிப்படுத்திய உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர், தீவிரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை இதற்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் நம்பிக்கையை கட்டமைத்தல் ஆகியவற்றில் போக்குவரத்து இணைப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், சபஹர் துறைமுகம், சர்வதேச வடக்கு – தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற திட்டங்களுக்கு இந்தியா உறுதியுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
புத்தொழில்கள், புதுமை கண்டுபிடிப்புகள், இளையோருக்கு அதிகாரமளித்தல், பகிரப்படும் பாரம்பரியம் ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் உரையாற்றிய அவர், இவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திட்டத்தின் கீழ், பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மக்களுக்கு இடையேயான தொடர்புகள், கலாச்சார புரிந்துணர்வு ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக இந்த அமைப்பில் நாகரீக உரையாடல் அமைப்பை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி பரிந்துரைத்தார்.இந்த அமைப்பின் சீர்திருத்தம் சார்ந்த திட்டங்களுக்கு பிரதமர் ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பாக திட்டமிட்டு நடைபெறும் குற்றம், போதைப் பொருள் கடத்தல், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்கொள்வதற்காக மையங்களை ஏற்படுத்துவது என்ற முடிவுக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதே போன்ற அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இந்திய ரஷ்ய உறவு:
இந்தியாவுக்கு டிரம்ப் அரசு விதித்த வரிகளால் அமெரிக்க மீது கடுங்கோபத்தில் மோடியின் அரசு உள்ளது. இதனால் அமெரிக்கவுடன் வர்த்தக உறவுகளை தவிர்த்து ரஷ்யாவுடன் நல்லுறவை இந்திய அரசு கொண்டுள்ளது.
ஆனாலும் நீண்ட காலமாக இந்தியா – ரஷ்யா இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இக்கட்டான காலங்களில்கூட இரு நாடுகளும் தோளோடுதோள் நின்று பயணம் செய்கின்றன. உலக நன்மை, அமைதி, வளத்துக்காக இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
குறிப்பாக உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரஷ்யாவும், உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர அமைதி திரும்ப வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்துகிறது.
ரஷ்ய அதிபர் புட்டின் காலத்திலும், ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. அனைத்து துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

ஷாங்காயில் மாநாடு முடிவடைந்ததும், அதிபர் புட்டின் தனது சிறப்பு காரில் புறப்பட்ட போது அப்போது பிரதமர் மோடியையும் அவரது காரில் அழைத்துச் சென்றார். இரு தலைவர்களும் தங்குமிடங்களுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அதிபர் புட்டினும், பிரதமர் மோடியும் காரிலேயே தீவிர ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்க அரசின் வரி விதிப்பு, உக்ரைன் போர் குறித்து அவர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புட்டினும், பிரதமர் மோடியும் கைகோத்தபடி நடந்து சென்றனர். அப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓரமாக நின்றிருந்தார். அவர் விரக்தியுடன் பார்க்கும் வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
ஆனால் அவரது பேச்சு கருத்தில் கொள்ளப்படவில்லை. மாநாடு முழுவதும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்துவிடப்பட்டு, ஒருவித பரிதவிப்புடனே அவர் இருந்ததுபோன்ற சூழ்நிலை நிலவியது என சில இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் அவரது பேச்சு கருத்தில் கொள்ளப்படவில்லை. மாநாடு முழுவதும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்துவிடப்பட்டு, ஒருவித பரிதவிப்புடனே அவர் இருந்ததுபோன்ற சூழ்நிலை நிலவியது என சில இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்தியாவுக்கு டிரம்ப் அரசு விதித்த வரிகளால் அமெரிக்க மீது கடுங்கோபத்தில் மோடியின் அரசு உள்ளது. இதனால் அமெரிக்கவுடன் வர்த்தக உறவுகளை தவிர்த்து ரஷ்யாவுடன் நல்லுறவை இந்திய அரசு கொண்டுள்ளது. இந்த மாநாட்டுன் முடிவில் ரஷ்ய -இந்திய – சீன முத்தரப்பு கூட்டணி உருவானது, அமெரிக்காவிற்கு பெருஞ் சவாலாக எழுந்துள்ளது.
![]()