செம்மணி மயானத்தின் எரிதகன மேடைக்கு கீழும் எலும்புக் கூடுகள்; அருகில் உள்ள பகுதியில் சில கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தின் எரிதகன மேடை உள்ள பகுதிக்கு கீழாகவும் எலும்புக் கூடுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது..
புதிதாக விரிவுபடுத்தப்பட்டு அகழப்படும் செம்மணி மனித புதைகுழியில் நேற்றையதினம் மேலும் பல மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சித்துபாத்தி இந்து மயானத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிடத்தக்க அளவு கொண்ட செம்மணி மனித புதைகுழி விரிவுபடுத்தப்பட்டு கடந்த சில தினங்களாக அகழப்பட்டு வருகிறது இங்கு தினமும் பெருமளவில் எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை மயானத்தின் எரிதகன மேடைக்கு மிக அருகில் உள்ள
பகுதியில் விலங்கினுடையதாக கருதப்படும் எலும்புக்கூடொன்றிற்கு கீழே மேலும் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
எரிதகன மேடைக்கு அருகில் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்
அந்த எரிதகன மேடை உள்ள பகுதிக்கு கீழாகவும் எலும்புக் கூடுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் எதிர்வரும் தினங்களில் அங்கும் தோண்டும் பணிகளை மேற்கொள்வதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![]()