கல்முனை,கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இனியபாரதியின் இரு சகாக்கள் கைது

இனியபாரதியின் கல்முனையைச் சோந்த சகாவான டிலக்ஷன் என்பவரை கல்முனையில் வைத்து சனிக்கிழமை சி.ஐ.டி.யினர் கைது செய்ததுடன் வெளிநாடு தப்பி ஓடமுயற்சித்த காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் என்பவரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் மீது 2007-6-28 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட பிரதேசசபை தவிசாளரின் மனைவி சி.ஐ.டி.யிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை 6ஆம் திகதி திருக்கோவிலில் வைத்து இனியபாரதியையும் அவரது சகாவான மட்டு சந்திவெளியைச் சேர்ந்த சசிதரன் தவசீலன் என்பவரை சந்திவெளியில் வைத்தும் , சி.ஐ.டியினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் திருக்கோவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் உதயகுமாரை கடந்த 2007-06-28 அன்று வீட்டில் இருந்து வெளியே வீதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வாளால் வெட்டி காயப்படுத்திய பின்னர் கைக்குண்டை வீசி படுகொலை செய்யப்பட்டம்,ஐ தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அவரின் சகாவான கல்முனையைச் சேர்ந்த டிலக்ஷ்ன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சி.ஐ.டி. யினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதேவேளை இனியபாதியின் இன்னெரு சகாவான வவுணதீவு பாவற்கொடிச் சேனையைச் சேர்ந்தவரான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற நிலையில் அங்குவைத்து கடந்த 12ஆம் திகதி சி.ஐ .டி. யினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
![]()