இலங்கை

பாராளுமன்றத்திற்கு மீண்டும் வரும் ரணில்!; சிலிண்டர்எம்.பி. ஒருவர் விலகுவார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவார் என்று முன்னாள் எம்.பி. பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் இரண்டு எம்.பி.க்களில் ஒருவர் ராஜினாமா செய்து ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிப்பார் என்றும் அவர் கூறினார்.

ராஜினாமா செய்யும் எம்.பி யார் என்பதை முன்னணியின் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட வாக்குகளிலிருந்து சிலிண்டர் 2 மில்லியன் வாக்குகளைப் பெற்றது. ரணில் விக்கிரமசிங்க சிலிண்டரை வழிநடத்தியதால் பொதுத் தேர்தலில் 2 மில்லியன் வாக்குகளைப் பெற்று இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றது .

அவர் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. ஜனநாயகத்தை வழிநடத்திய ஒருவர். அவர் பாராளுமன்றத்திற்கு வர இதுவே சரியான நேரம். இப்போது பாராளுமன்றம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அவர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *