கவிதைகள்

மறைமூர்த்தி கண்ணா!…. கவிதை…. சங்கர சுப்பிரமணியன்

நன் ஒரு படைப்பை படைத்தேன்
எவருடைய சாயலோ தெரிகிறதென்றார்

அமைதியாக ஒரு கேள்வி கேட்டேன்
இராமயணம் கதை தெரியுமா என்று

குழந்தைகளுக்கு கூட தெரியும் கதை
எனக்கு தெரியாமல் போகுமா என்றார்

கோபப்பட வேண்டாம் என்று வேண்டி
இராமாயணத்தை கூறுங்கள் என்றேன்

சுருக்கமாக அதை சொல்லி முடித்தார்
பட்டம்சூட்டும்வரை வளமை குன்றாது

உங்கள் படைப்பா இது என்று நன் கேட்க
அசடு வழிய சிரித்தபடி அவர் நின்றார்

உலகறிந்த படைப்பையே தெரிந்தே
உங்கள் படைப்புபோல சொல்லும்போது

ஒருவரின் படைப்பை வாசித்த அனுபவம்
அவரின் சாயல் வருவது குறையா என்றேன்

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா

என்று பாட ஆரம்பித்தவர் என்னைவிட்டு
அங்கிருந்து ஓடவும் ஆரம்பித்தார்!

சங்கர சுப்பிரமணியன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *