இலங்கை
செம்மணிக்கு செல்லும் ஜனாதிபதி அனுர?

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க விஜயம் செய்யும் போது செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி பார்வையிடலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடுவது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அவர் யாழ்ப்பாணம் வரும் போது செம்மணிப் புதைகுழியையும் பார்வையிடலாம் – என்றார்.
![]()