இலங்கை

செம்மணிப் புதைகுழியில் இனங்காணப்பட்ட ஆடை!

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அகழ்வின்போது ஆடையொன்று இனங்காணப்பட்டது.

செம்மணிப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கிய நிலையில் 34 ஆவது நாளாக நேற்று முன் தினம் அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது 16 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஆடையொன்றும் இனங்காணப்பட்டது.

அந்த ஆடை முழுமையாக அகழந்தெடுக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டாலே மேலதிக விபரங்கள் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *