இலங்கை
யாழ்., நல்லூரில் வாள்வெட்டுத் தாக்குதல்; ஐவர் கைது

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் (16) இரவு ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
![]()