இந்தியா

டெல்லியில் 11 ஆயிரம் கோடி ரூபாவில் நெடுஞ்சாலை திட்டம் – மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை 11 ஆயிரம் கோடி ரூபாவில் 02 பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார்.

டெல்லி ரோகினி பகுதியில் மதியம் 12.30 க்கு பிரதமர் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

துவாராகா விரைவு சாலையின் டெல்லி பகுதியையும், நகர்புற விரிவாக்கம் சாலை 02 திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

நொய்டாவில் இருந்து டெல்லி விமான நிலையம் வரையிலான விரைவு சாலை இந்த திட்டங்களில் அடங்கும்.

டெல்லி-என்.சி.ஆர். இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இந்த விரைவு சாலை திறக்கப்படுவதால் நொய்டாவில் இருந்து விமான நிலையத்தை 20 நிமிடத்தில் சென்றடையலாம்.

டெல்லியின் புறநகர் பகுதிகளை இணைக்கும் 76 கிலோ மீற்றர் தூரம் உள்ள சாலையும் திறந்து வைக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *