இந்தியா

விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்

விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்” என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் இடம்பெற்று வரும் இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விண்வெளி சார்ந்த 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் உள்ளன.

நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபட வேண்டும். நாம் பெரிதாக கனவு காண வேண்டும். அரசு துணை நிற்கும். நான் உங்களுடன் இருக்கிறேன். வரலாறு படைப்போம்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *