இலங்கை

செம்மணி வழக்கிலிருந்து சி.ஐ.டி.யினரை அகற்றவும்; நீதிமன்றிடம் சுமந்திரன் கோரிக்கை

சி.ஐ.டி. மனித புதைகுழி வழக்கு விசாரணை நடவடிக்கையில் இருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை(சி.ஐ.டி.)விலத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

செம்மணி மனித புதைகுழி வழக்கு தொடர்பான விசாரணை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற போதே சுமந்திரனால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் வழக்கு நிறைவுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை பொறுத்தவரையில் இந்த விடயங்கள் சம்பந்தமாக புலன் விசாரணையை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

மரண விசாரணை ஆரம்பித்த பின்னரே புலன்விசாரணை ஆரம்பமாகும். சமாந்தரமாக புலன் விசாரணை தேவை என்று பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விசாரணை செய்கிறார்கள்.

ஆரம்பத்தில் எதிர்ப்புகள் இல்லாவிடினும் நானும் சட்டத்தரணி மணிவண்ணனும் சட்டத்தரணி குருபரனும் சிலரை வாக்குமூலம் எடுப்பதற்காக வரவழைத்து,குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தங்களைப் பயமுறுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறோம்.

இதன் அடிப்படையிலேயே எவராவது வாக்குமூலம் கொடுக்க வருகின்ற போது சி.ஐ.டி. மயானத்திலேயே, அந்தப் பிரதேசத்திலேயே அனைவரும் காணக் கூடிய விதத்தில் வாக்குமூலம் பதிவு செய்வது உசிதமானது என்று நீதவான் உத்தரவிட்டார்.

நான் விசேடமாக,குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினரை இந்த வழக்கு விசாரணை நடவடிக்கையில் இருந்து அகற்றுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

இந்த நேரத்தில் அவர்கள் இங்கு ஈடுபடத் தேவையில்லை. அவர்களை அகற்றுமாறு கோரிக்கையை முன்வைத்திருக்கிறேன் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *