முத்துஐயன்கட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம் – பொலிஸார், அதிரடி படையினர் விஷேட பாதுகாப்பு

முத்துஐயன்கட்டில் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தப்பியோடியதாக கூறி பின்னர் சடலமாக மீட்கப்பட்டவரின் உடலம் இன்று (11) அடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முத்துஐயன்கட்டில் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து கடந்த 07ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு ஐவர் முகாமிற்கு சென்ற நிலையில் தாக்கப்பட்டதாகவும், நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இறந்தவரின் உடலம் இன்று 1.00 மணியளவில் அடக்கம் செய்ய இருக்கும் நிலையில் கலகம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தில்பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
![]()