இலங்கை

ஊடகவியலாளர் குமணனுக்கு முல்லைத்தீவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் அழைப்பாணை

முல்லைத்தீவு பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID), ஊடகவியலாளர் குமணன் கணபதிப்பிள்ளையை விசாரணைக்கு அழைத்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள TID அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், இந்த அழைப்பாணையில் விசாரணைக்கான காரணம் அல்லது அது தொடர்பான விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதில் குமணன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பல ஆண்டுகளாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர் பலமுறை அச்சுறுத்தல்களையும் தலையீடுகளையும் எதிர்கொண்டுள்ளார். இது குமணனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் முதலாவது நடவடிக்கை அல்ல.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *