இலங்கை

செம்மணி மனித புதைகுழி ஸ்கான் பரிசோதனை இறுதி அறிக்கை மூன்று வாரத்தில்

செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெற்ற ஸ்கான் பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் மூன்று வாரத்தில்
நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 31 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நிலத்தில் காணப்படுகின்ற வித்தியாசமான சான்று பொருட்களின் இருப்பு தொடர்பான பரிசோதனை திங்கட்கிழமை காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை மதியம்
வரை நடைபெற்றது.

முடிவடைந்த ஸ்கான் பரிசோதனை தொடர்பான அறிக்கை எதிர்வரும் மூன்று வாரத்தில் கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப துறையினரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சந்தேகத்திற்குரிய மற்றும் உத்தேசமாக இருக்கலாம் என கருதப்படும் பகுதியில் முழுமையாக ஸ்கான் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *