இந்தியா

மேடையில் ஒருவரை ஒருவர் வசை பாடிய தி.மு.கவினர்

தேனி மாவட்டம் அருகே, தி.மு.க. எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. மகாராஜன் இருவரும் மேடையில் ஒருவரையொருவர் கடும் சொற்களால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது போஸ்டர் யுத்தமாக மாறியுள்ளது.

ஆண்டிப்பட்டிக்கு அருகிலுள்ள சக்கம்பட்டி பகுதியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், தங்க தமிழ்ச்செல்வனும், மகாராஜனும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரையொருவர் ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக தி.மு.க. நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், “தங்க தமிழ்ச்செல்வனை அவமரியாதையாக பேசிய எம்.எல்.ஏ. மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும், “கட்சியினரை மதிக்காத அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *