இலங்கை

செம்மணி மனித புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட தடயப் பொருட்களை 5ஆம் திகதி மக்கள் அடையாளம் காட்ட முடியும்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் தடயப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்பித்த விண்ணப்பத்திற்கமைய குறித்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அந்த நீதிமன்ற கட்டளையில்,

யாழ்ப்பாணம் ஏ-9 வீதிக்கு அருகில் செம்மணி பகுதியில் உள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில், நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின்பொழுது, மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதக்கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குச் செய்த விண்ணப்பத்தின் பிரகாரம், நீதிமன்றமானது அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, செம்மணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் 2025.08.05ஆம் திகதி 1.30 மணிமுதல் 5 மணிவரை மேற்படி உடைகள் மற்றும் பிறபொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

அதனை பார்வையிட்டு, அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும்பட்சத்தில், அவற்றைப் நீதிமன்றுக்கு அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க இத்தால் பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.

மேற்படி கட்டளையானது, குற்றவியல் நடவடிக்கைமுறை கோவைச் சட்டத்தின் பிரிவுகள் 7 மற்றும் 124இன் கீழ், நீதிவான் என்ற ரீதியில் எனக்கு வழங்கப்பட்ட தற்துணிவின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகின்றது – தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *