இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி;  ஞாயிறும் , திங்களும் மயானத்தில் ஸ்கான்

செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தை ஸ்கான் செய்வதற்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என இரண்டு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 26 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தை ஸ்கான் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சில் இருந்து அனுமதி கிடைக்க தாமதமாவதால் கொழும்பு ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப துறையின் ஒத்துழைப்புடன் சித்துப்பாத்தி மயானத்தை ஸ்கான் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிக்கப்பட்ட கருவியின் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தாமதமாவதன் காரணமாக

பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதி ஊடாக இதை கொண்டு வருவது இலகு என்ற அடிப்படையிலும் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் தொடர்பு உள்ளது காரணத்தினால் நிபுணர்கள் பல்கலைக்கழகத்தினுடைய உதவியை நாடி இந்த விடயத்தை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *