இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து;  வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) என்ற தலைப்பில் நேற்று ஜுலை 31ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் அரசாங்க கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, அதனை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கடந்த வாரம் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அதற்கமைய அந்த சட்டமூலம் நேற்று வர்த்தமானியில் வெளியாகியுள்ளதுடன் கூடிய விரைவில் அதனை பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *