இந்தியா

நிமிஷா பிரியாவின் ஏமன் மரணதண்டனை இரத்து செய்யப்பட்டதா?

2017 ஆம் ஆண்டு ஏமனில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கேரள தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரண தண்டனை இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (29) நிராகரித்துள்ளது.

அதன்படி, நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக சில நபர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் தவறானவை என்று வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணதண்டனையை ஏமன் தலைநகர் சனாவில் ஹவுத்தி போராளிகள் இரத்து செய்துள்ளதாக கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் திங்கட்கிழமை (28) அறிவித்தது.

இருப்பினும், ஏமன் அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் பெறப்படவில்லை என்று அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கண்ட தகவல் வந்துள்ளது.

நிமிஷாவின் மரணதண்டனை முதலில் ஜூலை 16 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கிராண்ட் முப்தி முஸ்லியார் ஏமன் அதிகாரிகளிடம் கருணை கோரி நேரடியாக முறையிட்டதைத் தொடர்ந்து ஒரு நாள் முன்பு நிறுத்தப்பட்டது.

குற்றப் பின்னணி எனன்?

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​யில் சேர்ந்​தார். கடந்த 2015 இல் அரசு செவிலியர் பணியை இராஜி​னாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து அங்கு புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார்.

கருத்து வேறு​பாடு காரண​மாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்​திக்​கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த சனா நகர நீதி​மன்​றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதை ஏமன் உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​தது.

இதையடுத்​து, ஜூலை 16 ஆம் திகதி நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படும் என்று ஏமன் அரசு அறி​வித்​திருந்​தது.

சட்​டரீ​தி​யான முயற்​சிகள் தோல்வி அடைந்த நிலை​யில், மெஹ்தி குடும்​பத்​தினருக்கு 8.6 கோடி இந்திய ரூபா குரு​திப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்​பத்​தினர் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வருகின்றனர்.

இதற்கு தேவை​யான உதவி​களை மத்​திய அரசு வழங்கி வரு​கிறது. இதனிடையே, நிமிஷா​வின் மரண தண்​டனையை தள்​ளிவைக்​கு​மாறு மத்​திய அரசு சார்​பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்​டது.

இந்த விவ​காரத்​தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூல​மாக​வும் மத்​திய அரசு அழுத்​தம் கொடுத்​தது. கேரளாவை சேர்ந்த முஸ்​லிம் மத தலை​வர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்​கர் முஸ்​லி​யாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இந்தப் பின்னணியில் நிமிஷா பிரி​யா​வின் மரண தண்​டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *