இந்தியா

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தலைசுற்றல் காரணமாக கடந்த 7 நாட்களாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (27) வீடு திரும்பியுள்ளார்.

கடந்த 7 நாட்களாக வைத்தியர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலையில் ஓய்வெடுத்து வந்தார்.

வைத்தியசாலையில் இருந்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில், சென்னை அப்போலோ வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பியுள்ளார்.

வைத்தியசாலையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடரலாம் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *