இலங்கை

அடுத்த ஜனாதிபதி நாமலே! ; புலனாய்வு அறிக்கைகள் கூறுகிறது

நாட்டில் அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்‌ஷவே என்றும் புலனாய்வு அறிக்கைகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன என்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாமலின் வளர்ச்சி தொடர்பில் மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இதனால் அரசாங்கம் அவருக்கு பயப்படுகின்றது. அவ்வாறு பயப்படுவதால் அவர் மீது வழக்குகளை தொடர்ந்து விளக்க மறியலில் போடுவதற்கு முயற்சிக்கின்றது. ஆனால் அவரே அடுத்த ஜனாதிபதி என்று புலனாய்வு அறிக்கைகள் கூறுகின்றன. அடுத்த ஜனாதிபதியாக ஆசியாவின் இளம் தலைவரான நாமலே என்று பல்வேறு நாடுகளும் கதைக்கின்றன. தூதரகங்களும் அதனையே கூறுகின்றன. இதனை செய்வதற்காக நாங்கள் கட்சி மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *