இலங்கை

பிள்ளையான் குழுவின் அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு!

அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்பகுமார் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் நேற்று பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அணியிரால் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதனடிப்படையில் நேற்று இரு வேறு ஜீப் வண்டியில் குற்றப் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிந்த சந்தேக நபர்கள் அவ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

குறித்த நபர்கள் இனங்காட்டியதற்கு அமைய கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் மற்றும் பிரதான முகாமாக செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களுடன் நீண்ட நேரமாக குறித்த வீட்டில் தரித்து நின்ற புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *