இலங்கை

செம்மணியில் மேலும் மனித புதைகுழிகள்;  ஸ்கான் பரிசோதனை நடக்கும் 

செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்கான் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழியில் தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழப்படும் நிலையில் மேலதிகமாக ஸ்கான் பரிசோதனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பிரதேசத்தை சுற்றி ஸ்கான் பரிசோதனை செய்வதற்காக இந்த பகுதி துப்புரவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த அகழ்வு பணி நடைபெறும் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *