இலங்கை

உள்ளகப் பொறிமுறை வேண்டாம் சர்வதேச நீதி கோரி 26ம் திகதி வடக்கு கிழக்கு எங்கும் பெரும் போராட்டம்; 8 மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு ஆரம்பம் 

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் நடைபெறவுள்ளது.

உண்மைக்கும் நீதிக்குமான இந்த போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உள்ளகபொறிமுறை குறித்து நம்பிக்கையில்லை சர்வதேச பொறிமுறையையே நாங்கள் வேண்டி நிற்கின்றோம் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதற்காக நாளை வடக்குகிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்குகிழக்கின் சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கை விஜயத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமையாளர் உள்ளகப்பொறிமுறையை வலியுறுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்தமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் வடக்குகிழக்கின் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் மெய்நிகர் கலந்துரையாடலில் இது குறித்து தெரிவித்துள்ளதாவது

ஏன் தற்போது இந்த போராட்டம் என்ற கேள்வி எழக்கூடும்.

2009 இல் தங்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அழிப்பிற்கு வன்முறை கொலை பாலியல்வன்முறை போன்றவற்றிற்கு பலவழிகளில் நீதி கோரி தமிழனம் தோற்றுப்போயுள்ளது.

இந்த அடிப்படையில் சர்வதேசநீதியை கோரிநிற்கின்றோம்.

செம்மணி மீண்டுமொருமுறை சர்வதேச பொறிமுறையின் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் மறை முயல்கின்றது என தமிழ் மக்கள் கருதுகின்றனர். அப்படியாயின் நீதியான விசாரணைகள் நடப்பது சாத்தியமில்லை.

தமிழ் மக்கள் கடந்தகாலங்களில் பல விசாரணைகளில் ஆஜராகியிருந்தார்கள்இஆனால்எந்த பொறிமுறையும் நம்பகதன்மை மிக்கதாக அமையவில்லை.

ஐநா மனித உரிமையாளர் இலங்கை வருகின்றார் என்றவுடன் இந்தவிடயம் உரத்துப் பேசப்பட்டது.தமிழ்மக்கள் நீதி கோரி நின்றார்கள்.

ஆனால் ஐக்கியநாடுகள் மனித உரிமையாளர்உள்நாட்டு பொறிமுறையை ஊக்குவிக்கும் விதத்தில்கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு இந்த விடயத்தில் இயன்ற பல விடயங்களை செய்வதாக தெரிவித்துள்ளார்.

இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில்பல கேள்விகளையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே இந்த பொறிமுறையில் எங்களிற்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தவே இந்த போராட்டம்.

26ம் திகதி வடகிழக்கு சமூக இயக்கம் ஒரு பெரும் எதிர்ப்பு போராட்டத்தை வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு பொறிமுறை ஏற்புடையதல்ல என்பதை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். தமிழ் சிவில் சமூக அமையம் அவர்களிற்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *