இலங்கை

செம்மணிப் புதைகுழி அகழ்வு இன வன்முறைக்கு வழி வகுக்கும்; கம்மன்பில எச்சரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்ற விடயம் எனவும், அவ்வாறு அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது மீண்டும் இன வன்முறைக்கே வழி வகுக்கும் என்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது,

யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோண்டினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் பலர் மண்ணுக்குள்தான் புதைக்கப்பட்டார்கள். அந்தப் புதைகுழிகள் யுத்தத்தின் பின்னர் வெளிக்கிளம்பும் போது பலரும் வெவ்வேறு விதமாகக் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை செம்மணியில் தற்போது பெருமளவு நிதியை வீண் விரயம் செய்து, அரசு அகழ்வு பணியை மேற்கொளகின்றது அது தேவையற்ற விடயமே. இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியைத் தோண்டுவது, மீண்டும் இன வன்முறைக்கே வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *