இலங்கை

நாட்டில் மீண்டும் பாரிய நெருக்கடி நிலை ஏற்படும்; ரணில் எச்சரிக்கை

அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் நாட்டில் மீண்டும் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் பேசுகையில்,

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வெளிப்படுத்துகிறது. 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தொடந்தே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.சீனாவுடன் முதலாவதாக வர்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட நாடாக இலங்கை சிறப்பு பெறுகின்றது .இதனைத் தொடர்ந்தே இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பலமடைந்தது.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார்.குறுகிய காலத்தில் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை நான் அமுல்படுத்தியுள்ளேன்.இந்த திட்டங்களை தற்போதைய அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படுத்தினால் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும்.அதனை விடுத்து அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் நாட்டில் மீண்டும் மாறிய நெருக்கடி நிலைமை ஏற்படும்.அதனை தவிர்க்க முடியாது.

இதேவேளை முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன ஐக்கிய தேசியக் கட்சி பற்றியே அதிகளவில் நூல்களை வெளியிட்டுள்ளார்.அதுவும் நன்மைக்குத்தான் . ஏனெனில் 75 ஆண்டுகால அரசாங்கங்களை விமர்சிப்பவர்கள் இனியேனும் இவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *