பலதும் பத்தும்

அவுஸ்திரேலியாவில் ஆச்சரியம்!; 17 மணித்தியாலங்களில் கர்ப்பத்தை உணர்ந்த பெண்; ஆண் சிசுவைப் பிரசவித்தார்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், தாம் கர்ப்பமாக இருப்பதை 17 மணித்தியாலங்களில் உணர்ந்த பின்னர் ஆண் குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ளார்.

குறித்த பெண் இரண்டு வருடங்களாக ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அதனால் தான் சந்தோசமாக இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதாக அந்தப் பெண் நினைத்திருந்தார்.

தான் கர்ப்பமாக இருப்பதை மிகவும் தாமதமாகவோ அல்லது பிரசவம் ஆரம்பிக்கும் வரை கூட உணரவில்லை. அத்துடன் குறித்த பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சியும் சரியாகவே நிகழ்ந்துள்ளது.

இதனாலேயே கர்ப்பத்தை அறியாமல் இருந்த பெண் திடீரென தான் கர்ப்பமாக உள்ளார் என்பதை 17 மணித்தியாலங்களில் உணர்ந்துள்ளார். கர்ப்பம் தரித்ததை உணர்ந்த 17 மணித்தியாலங்களில் அவர் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். இது அனைவரையும் ஆச்சரியமைடைய வைத்துள்ளது.

இவ்வகையான கர்ப்பம், க்ரிப்டிக் கர்ப்பம் (Cryptic Pregnancy) என்று அழைக்கப்படுகின்றது.இதனை இரகசிய கர்ப்பம் என்றும் அழைப்பார்கள்.

இந்த வகையான கர்ப்பங்கள் மிகவும் அரிதானவை எனவும், குறைந்தபட்ச அறிகுறிகளால் அவை கவனிக்கப்படாமல் போகலாம் என்றும், இந்த நேரங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் பெண்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button