பலதும் பத்தும்

ஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள்

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியான நில அதிர்வு செயல்பாடு சிறிய தீவு சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும் பரவலான தூக்கமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை  இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், திங்கட்கிழமை நிலவரப்படி அகுசேகி தீவில் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், ஜூன் 21 ஆம் திகதி தொடங்கிய தொடர்ச்சியான நிலநடுக்கங்கள், மக்களின் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூன் 21 முதல் இந்தப் பகுதி சுமார் 1,582 நில அதிர்வு நிகழ்வுகளால் உலுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button