பலதும் பத்தும்

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள்

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள் | Major Plane Crashes Happened In Indiaஇந்தியாவில் இதுவரை நடைபெற்ற 10 மோசமான விபத்துக்களை இந்த பதிவில் காணலாம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது.

இதில் பயணிகள், விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
மேலும், விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 10 மாணவர்களும் உயிரிழந்தனர்.

இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 10 மோசமான விபத்துக்களை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள் | Major Plane Crashes Happened In India1978 ஜனவரி 1 அன்று மும்பையில் இருந்த துபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் அரபிக்கடலில் விழுந்து விபத்தை சந்தித்தது. இதில், பயணிகள், விமான ஊழியர்கள் உட்படபயணித்த 213 பேரும் உயிரிழந்தனர்.

ஜூன் 21, 1982 அன்று, மலேசியாவில் இருந்து, சென்னை வழியாக மும்பை விமான நிலையம் வந்த ஏர் இந்தியா 403 Boeing 707–437 விமானம் தரையிறக்கத்தின் போது விபத்தை சந்தித்தது. இதில், பயணிகள் விமான ஊழியர்கள் உட்பட 111 பேர் பயணித்த நிலையில், 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

அக்டோபர் 19, 1988 அன்று மும்பையிலிருந்து அகமதாபாத்திற்குச் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113 போயிங் 737-200 அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்தை சந்தித்தது. இதில் பயணித்த 135 பேரில் 133 பேர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 14, 1990 அன்று மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்த இந்தியன்இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள் | Major Plane Crashes Happened In India ஏர்லைன்ஸ் விமானம் 605, ஏர்பஸ் A320, பெங்களூருவை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் 146 பேர் பயணித்ததில், 92 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 16, 1991 அன்று கொல்கத்தாவில் இருந்து இம்பால் நோக்கி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 257 Boeing 737-2A8, மலை மீது மோதி விபத்தை சந்தித்ததில் அதில் பயணித்த 69 பேரும் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 26, 1993 அன்று அவுரங்காபாத்தில் இருந்து மும்பை நோக்கி பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 491, போயிங் 737, அவுரங்காபாத்தில் மின்கம்பம் மற்றும் லொறியில் மோதியது. இதில் பயணித்த 118 பேரில், 55 பேர் உயிரிழந்தனர்.

நவம்பர் 12, 1996 அன்று சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் போயிங் 747 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் இலியுஷின் இல்-76 ஆகியவை டெல்லி அருகே நடுவானில் மோதிக்கொண்டு விபத்தை சந்தித்தது. இரு விமானங்களிலும் பயணித்த 312 பேரும் உயிரிழந்தனர்.

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள் | Major Plane Crashes Happened In Indiaஜூலை 17, 2000 அன்று கொல்கத்தாவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட அலையன்ஸ் ஏர் விமானம் 7412 போயிங் 737-2A8, பாட்னாவில் தரையிறங்கும் போது விபத்தை சந்தித்தது. இதில் பயணித்த 58 பேரில் 55 பேர் உயிரிழந்தனர்.

மே 22, 2010 அன்று துபாயில் இருந்து, கர்நாடக மாநிலம் மங்களூர் நோக்கி பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 போயிங் 737-8HG (SFP) தரையிறங்கும் போது விபத்தை சந்தித்தது. இதில் பயணித்த 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 7, 2020 அன்று, துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344 போயிங் 737-8HG(SFP) தரையிறங்கும் போது விபத்தை சந்தித்து, அதில் பயணித்த 190 பேரில் 21 பேர் உயிரிழந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button