பலதும் பத்தும்

ஏர் இந்தியா விமான விபத்து; மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம்

ஏர் இந்தியா விமான விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களில் ஒருவர் பலியாக, மற்றவர் உயிர் பிழைத்துள்ளார்.

அதனால் அந்தக் குடும்பம் மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து

நேற்றைய தினம் இந்தியாவின் குஜராத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியதில், உயிரிழந்தவர்களில் 52 பிரித்தானியர்களும் அடங்குவர்.

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் | Air India Crash Uk Family Lost One Alive One Son அந்த விமானத்தில் பிரித்தானிய குடிமக்களான அஜய்குமார் ரமேஷ் (35)மற்றும் விஸ்வாஷ்குமார் (40) என்னும் இரண்டு சகோதரர்கள் பயணித்துள்ளார்கள்.

விபத்தில் விஸ்வாஷ்குமார் ஆச்சரிய விதமாக உயிர் பிழைக்க, அஜய்குமார் உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், Leicesterஇலுள்ள அஜய்குமார், விஸ்வாஷ்குமார் இல்லத்தில், அவர்களுடைய தாய்க்கு ஆறுதல் சொல்வதற்காக உறவினர்கள் கூடியுள்ளார்கள்.

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் | Air India Crash Uk Family Lost One Alive One Son

அப்போது பேசிய அஜய்குமார், விஸ்வாஷ்குமாரின் இளைய சகோதரரான நயன்குமார் ரமேஷ், சகோதரர்களில் ஒருவராவது உயிர் பிழைத்தது ஒரு அற்புதம்தான் என்று கூறியுள்ளார்.

ஒரு சகோதரர் உயிர் பிழைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைவதா, அல்லது ஒரு சகோதாரர் மரணமடைந்துவிட்டதால் என்று தெரியவில்லை என்கிறார் அவர்.

அழும் தன் தாயை சுட்டிக்காட்டி, இதுதான் எங்கள் மன நிலைமை, நாங்கள் குழப்பத்தில் இருக்கிறோம் என்கிறார் நயன்குமார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button