பலதும் பத்தும்

‘பசுமை புகையிரத நிலையம்’ – தங்கப்பதக்கத்தை வென்ற திருகோணமலை

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற “பசுமை புகையிரத நிலையம்” என்ற போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்ட திருகோணமலை புகையிரத நிலைய அதிகாரி மற்றும் சக ஊழியர்களை கொளரவிக்கும் நிகழ்வும் மர நடுகை நிகழ்வும் புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் புகையிரத நிலைய அதிபர் தி.சர்வேஸ்வரனை பொன்னாடை அணிவித்து கௌரவித்ததோடு ஏனைய ஊழியர்களையும் கௌரவித்தனர்.

அத்துடன் புங்கை மரங்களும் நடுகை செய்யப்பட்டன.

மேலும் குறித்த வெற்றிக்கு மரங்களை வழங்கி உதவியதோடு,  திட்டத்தை முன்னெடுத்திருந்த Trinco Aid நிறுவனத்தின் நிர்வாகி ஹரிஹரனும் இதன்போது புகையிரத நிலைய அதிபரினால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

பசுமை புகையிரத நிலைத்திற்கான  போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட திருகோணமலை புகையிரத நிலைய தலைமை அதிபர்  தி.சர்வேஸ்வரன் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *