பலதும் பத்தும்

கொழும்பு – யாழ்ப்பாணம் விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்!!

இரண்டு வருடங்களின் பின்னர் இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையத்திற்கு இடையிலான சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

இதனடிப்படையில் குறித்த சேவையினை ஆரம்பிக்கும் முகமாக தகுதிகான் விமான சேவை டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டது .

கடந்த 2023ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தபட்ட விமான சேவையானது மீண்டும் டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தின் மூலம் இலங்கை விமான சேவைகள் அதிகார சபைக்கு விண்ணப்பிக்கபட்ட விண்ணப்பத்தினை பரிசீலிக்கும் முகமாக தகுதிகாண் சேவை இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த இலங்கை விமான சேவைகள் அதிகார சபையில் பிரதி தலைவர், பின்வருமாறு தனது கருத்தினை பதிவு செய்தார்,

“குறிப்பாக இரண்டு வருடங்களின் பின்னர் இந்த சேவையை ஆரம்பிக்கப்படுகிறது. நமது நோக்கம் இலங்கைக்கு இடையில் உள்நாட்டு விமான சேவைகளை வளர்ப்பதாகும் .

அதன் அடிப்படையில் டேவிட் பிரிஸ் குடும்பத்தினராக முன்வைக்கப்பட்ட கோரிக்கை அமைவாக இன்று தகுதிகாண் சேவை பரிசோதிக்கப்பட்டது, அனைத்து பரிசோதனை நடவடிக்கைகளிலும் டேவிட் பிரிஸ் விமான சேவைகள் சித்தி பெற்றுள்ளது.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான கட்டுமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பூர்த்தி செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.

டேவிட் பிரிஸ் விமான சேவைகள் நிறுவனம் தமது சேவைக்கான விண்ணப்பமாக விளங்குகின்ற போது நாங்கள் அதனை அனுமதிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த டேவிட் ஃபீரிஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானி, இந்த சேவையினை வாராந்தம் மூன்று நாட்கள் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம் .

இருவழி கட்டணமாக 68,000 ரூபாய் அறவிடப்படும். ஏழு கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும் இதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும்.

வெகு விரைவில் விமான சேவைகள் போக்குவரத்து அதிகார சபைக்கு கட்டுநாயக்க வரை சேவை விசாரிப்பதற்கு நாம் விண்ணப்பிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

பயண நேரமானது ஒரு வழிக்கு 1 மணத்தியாலம் 10 நிமிடம் தேவைபடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button