பலதும் பத்தும்

பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவரு வயது 75 ஆகும்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் இன்று காலை உயிரிழந்தார்.

முன்னதாக இன்று காலை 8.15 மணியளவில் அவருடைய வீட்டில் இருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த ராஜேஷ், திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம் ஆனைக்காடு, தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய இடங்களில் படித்தவர்.

‘கன்னிப் பருவத்திலே’ படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ், அதற்குப் பின்னர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த குணச்சித்திர நடிகரான ராஜேஷ், தமிழ் மற்றும் திரைப்படங்கள் மட்டுமல்ல சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

இந்நிலையில் அவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button