இலங்கை

நல்லூரானின் தேர்த்திருவிழா!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று (09) பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை முதலே நல்லூர் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழிந்தன.

காலை 6.15 மணியளவில் வசந்த மண்டபப் பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, காலை 7.00 மணியளவில் முருகப்பெருமான் பக்தர்களின் அரோகரா முழக்கங்களுக்கு மத்தியில் நல்லூரான் திருத்தேரில் எழுந்தருளினார்.

பின்னர், காலை 7.30 மணியளவில் திருத்தேரின் வடம் பிடித்து . ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து தேரை இழுக்க, “அரோகரா! அரோகரா!” என்ற பக்தி முழக்கங்கள் நல்லூர் நான்கு வீதிகளிலும் எதிரொலித்தன.

தேரில் எழுந்தருளிய நல்லூரான் நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதிகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, மலர் தூவி, கைகூப்பி நல்லூரானை தரிசித்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இன்றைய தேர்த்திருவிழா, பக்தி, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் சங்கமமாக அமைந்ததுடன், நல்லூரின் ஆன்மிகப் பெருமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக்காட்டியது.

காலை 8.30 மணியளவில் திருத்தேர் தனது நிலையிடத்தை வந்தடைந்தார்.

https://web.facebook.com/share/v/19TMgJ7UNr/

May be an image of one or more people, temple and crowdMay be an image of crowd, temple and text

 

May be an image of one or more people, crowd, temple and text

May be an image of temple and crowd

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *