உலகம்

டிரம்ப் அறிவிப்பால் அனைவரும் அதிர்ச்சி

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என்ற புதிய மசோதாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளது. இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *