இலங்கை

யோஷித மற்றும் டேஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேஸி பொரஸ்ட் ஆகியோர் மீதான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுமென கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த முறைப்பாடு   வெள்ளிக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து, சந்தேக நபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் டேஸி பொரஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையானர்.

இதன்போது அவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், நீதிமன்றத்தில் வாதிடுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதியரசர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் கருத்தை கவனத்திற் கொண்ட நீதவான், முறைப்பாட்டை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இந்தக் கோரிக்கை தொடர்பாக கருத்திற் கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *