பலதும் பத்தும்

கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரிக்கு மனோ வாழ்த்து..!

கனடாவின் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஹரி ஆனந்தசங்கரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கனடாவில் அண்மையில் நடைபெற்ற மத்திய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் கடந்த செவ்வாய்கிழமை(13)ஒட்டாவா நகரில் நடைபெற்றது.

அதன்படி கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராக இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட ஹரி ஆனந்தசங்கரி பதவியேற்றுக்கொண்டார்.

அவரை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு ‘சகோதரரே, வாழ்த்துக்கள். நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள். சிறப்பாகச் செய்வீர்கள். தொடர்ந்து செல்லுங்கள். நாம் தொடர்பில் இருப்போம்’ என வாழ்த்துக் கூறியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button