உலகம்

காஸாவில் கடும் உணவுத் தட்டுப்பாடு – 57 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காஸாவில் தற்போது நிலவும் கடுமையான உணவுத் தட்டுப்பாடு காரணமாக, இதுவரையில் சுமார் 57 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனிதாபிமான பொருட்களை இஸ்ரேல், காஸாவின் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இத்தகைய செயற்பாட்டிற்குப் பல நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இதேவேளை, காஸாவின் பல பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் மூவர் உள்ளிட்ட, 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *