இலங்கை

பிள்ளையானை பற்றி பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு தூக்கம் வராது

களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த கருணா அம்மான்.

களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் வரும் வார்த்தை பிள்ளையான் பிள்ளையான், பிள்ளையான பற்றி பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை என தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கலினால் திட்டமிட்டு பிள்ளையானை கைது செய்து செய்தார்கள். இந்த உலகம் முழுவதும் பிள்ளையான் பிள்ளையான் என கத்துகின்றனர்” என்றார்.

இதன்போது பிள்ளையான தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 72 வருடங்களுக்கு மேலாக வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து வாக்களித்து வீடு கூட இல்லாமல் தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்தவர்கள்தான் தமிழரசுக்கட்சியினர்.

போராளிகளின் புதை குழிகளில் நின்று கேவலமாக வாக்கு கேட்கும் நீங்கள் போராளிகளின் குடும்பங்களை பாதுகாக்க முடியாமல் நிற்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *