இலங்கை

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டார்

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று (23) காலை 9:30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பேராயர் வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

பரிசுத்த பாப்பரசரின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *